கிணற்றடிப்பூண்டு

கிணற்றடிப்பூண்டு எல்லாவித வளமான மண்ணில் வளரும் ஒரு சிறு செடி. 

Image may contain: plant, flower, nature and outdoor

இதன். பற்களுள்ள சற்று நீண்ட தடிப்பான சொரசொரப்பான பச்சை இலைகளையும், மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய சிறுசெடி. ஈரமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது.
இலையின் நீளம் 3-6 1.5-3 செ.மீ. தண்டு 5 -10 மி.மீ. நீளம், பூவின் விட்டம் 1.3 1.5 செ.மீ. பூவின் இதழ்கள் 5. நடுவில் வெண்மையாக இருக்கும். தன்மகரந்தச் சேர்க்கையால் விதை உண்டாகும். ஒரு செடியில் 1500 விதைகள் இருக்கும் அவை காற்றில் பரவி ஒட்டிக் கொள்ளும்.
இது சாலையோரங்களில், தரிசு நிலங்களில், தோட்டங்கள், புல்வெளிகள் எங்கும் பரவி வளரும். சீதோஷ்ண, மிதசீதோஷ்ண வெப்பத்தில் வளரக்கூடியது. உலகெங்கும் பரவியுள்ளது. லேசான பஞ்சுபோன்ற விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள்
இது புண்ணாற்றும், குருதியடக்கி, கபநிவாரண,மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோர்ப்பு, வயிற்றுப்போக்கு, பேதி முதலியவை குணமாகும்.🌷
இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவிற்றில் பற்றிடச் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.
கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் ஆலோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும்.
மேலும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.
#வெட்டுக்காயப்_பூண்டு
இரத்தத்தை உறைய வைக்கும் திறன் வெட்டுக்காயப்பூண்டு இலைச்சாற்றுக்கு இருப்பது உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெட்டுக்காயப்பூண்டு சிறுசெடி ஆகும். மென்மையான, அடர்த்தியான உரோமங்கள் கொண்ட தாவரம். 1மீ.வரை உயரமானவை, தரையோடு படர்ந்து, நுனிப்பகுதி மட்டும் நிமிர்ந்து வளர்ந்திருக்கும்.

இலைகள், எதிர் அடுக்கானவை, சொரசொரப்பானவை, ஈட்டி, முட்டை வடிவமானவை, இலைத்தாள் முழுமையானது. பூக்கள், தொகுப்பானவை, தலை போன்ற தோற்றத்துடன் கூடியவை (தாத்தா தலைப்பூ).
மலர்கள், மஞ்சள் நிறமானவை, பிளவுபட்ட நாக்கு போன்றவை. ஆண், பெண் மலர்கள் தனித்தனியாகவும், மற்றும் இருபால் மலர்களும் ஒரே பூங்கொத்தில் காணப்படும்.
காய்கள், வெடித்துச் சிதறும் தன்மையானவை. விதைகள், கருப்பானவை. சிறு மயிரிழை போன்ற உரோமங்களும் காணப்படும்.
சமவெளிகள், கடற்கரையோரங்கள், புதிய நிலங்களில் தீவிரமாகப் பரவுகின்றன. மலர்கள், மழைக்காலத்தில் அதிகமாகவும், கோடைகாலத்தில் குறைந்தும் காணப்படும்.
#வெட்டுக்காயங்கள்_குணமாக வெட்டுக்காயப்பூண்டு இலைகளைப் பச்சையாக அரைத்து, சாற்றைக் காயத்தின் மீது தடவி, இரத்தம் வருவது நின்ற பின்னர், அரைத்த இலைகளைப் பாதிக்கப்பட்ட இடத்தில் பரப்பி, கட்டுப்போட வேண்டும்.
புண்கள் குணமாக வெட்டுக்காயப்பூண்டு இலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து, பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட வேண்டும். தினமும் ஒரு முறை, புண்கள் ஆறும்வரை தொடர்ந்து செய்து வரலாம்.

Comments

Popular posts from this blog

சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எண்ணெய் தோய்த்து குளியல் - சாஸ்திர விளக்கம்.