Posts

எண்ணெய் தோய்த்து குளியல் - சாஸ்திர விளக்கம்.

20ம் நூற்றாண்டில் எண்ணெய் தோய்த்து குளியல் என்பது கொஞ்சம் அரிதாக போய்விட்டது ... ஆண்களுக்கு பலன் பின்வருமாறு ஞாயிறு எண்ணைய் குளியல் ;- இருதயத்தில் தாபம் . திங்கள் எண்ணெய் குளியல் ;- பொழிவு தரும் மேனி செவ்வாய் எண்ணெய் குளியல் ;- அற்பாயுள் புதன் எண்ணெய் குளியல் ;- செல்வநிலை மேலோங்கும் வியாழன் எண்ணெய் குளியல் ;- தரித்திரம் தாண்டவம் ஆடும்.... வெள்ளி எண்ணெய் குளியல் ;- ஆண்களுக்கு ஆபத்தை தரும் சனி எண்ணெய் குளியல் ;- தீர்க்காயுள் தரும் (சனி நீராடு என்று சொல்லி விட்டு போயுள்ளது ஒளவையார் ) சரி அதேபோல பெண்களுக்கு ??** செவ்வாய் எண்ணெய் குளியல் ;- பாக்ய விருத்தி தரும் வெள்ளி எண்ணெய் குளியல் ;- செளபாக்கியவதி ஆக வாழ்வார்கள் இவ்வாறாக ஆண் பெண் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் !!!! "தசமி,பஞ்சமி ,திருதியை ,சப்தமி ,துவிதியை ஆகிய நாட்கள் சேர்ந்து வந்தால் சந்ததி விருத்தி இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் உள்ளது ... உடல்நல குறை உள்ளோர்கள் மேற்படி திதி கலந்த சனிக்கிழமைகளில் (ஆண்கள் )எண்ணெய் குளியல் செய்ய ஆயுள் விருத்தி மற்றும் நோய் நிவர்த்தி ...

சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

Image
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம். ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அ...

அத்திப்பழம்

Image
சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன. அத்திப்பழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. பெண்கள் தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்துக் காலை எழுந்தவுடன் நீரைக் குடித்து பழத்தை மென்று சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்பக் காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன், உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாகப் பெறமுடியும். சரிவரப் பசி எடுக்காத குழந்தைகளுக்கு அத்திப்பழம் நல்லது. இருமல் உள்ள குழந்தைகளுக்கும் அத்திப்பழம் கொடுக்கலாம். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது இது. உயரழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

அற்புத மருத்துவ குணம் நிறைந்த மூலிகை கீழாநெல்லி!

Image
இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது. இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேகநோயால் அவதிப்படுபவர் இதை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.  மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப்படுகிறது. கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து, வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். தாது பலம் இழந்து ...

எண்ணெய் தேய்ச்சு குளிங்க

Image
எண்ணெய் தேய்ச்சு குளிங்க :- ‘‘வாரத்துக்கு ரெண்டு தடவத் தலைக்கு நல்லெண்ணெய் தேய்ச்சுக் குளிங்க, பெரும்பாலான நோய்கள் அண்டாது" என்று சொன்னால், பெரும்பாலானவர்கள், "தீபாவளிக்குத் தேய்ச்சு குளிக்கிறோமே, அதைத்தானே சொல்றீங்க" என்று கேட்பார்கள். எண்ணெய் குளியல் என்றாலே, "அது தீபத் திருநாளன்று மட்டும்" என்று மக்களின் மனதில் வலுவாகப் பதிந்துவிட்டது. ஆத்திச்சூடியில் ஔவையார் சொல்லும் ‘சனி நீராடு' என்றாலும் சரி, நமது பெரியவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளி என்றாலும் சரி, இரண்டும் தரும் பலன் ஒன்றுதான். உடல்நலனை உடல் வெப்பத்தைச் சீர்ப்படுத்தவே அப்படிச் செய்யச் சொல்கிறார்கள். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் வலியுறுத்தப்பட்டு, நம் முன்னோர்கள் அதைத் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள். ஆனால், குளிப்பதே பிரச்சினையாக உள்ள இன்றைக்கு எண்ணெய்க் குளியல் எல்லாம் எப்படி முடியும் என்று கேள்வி கேட்கிறோம். வேறு வழியில்லை, நவீன வாழ்க்கை உருவாக்கும் நெருக்கடி களையும், அதனால் உடல்நலனில் ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் எண்ணெய்க் குளியல் அவசியம். குளியல் முறை செவ்வாய், வெள்ளிக...

கிணற்றடிப்பூண்டு

Image
கிணற்றடிப்பூண்டு எல்லாவித வளமான மண்ணில் வளரும் ஒரு சிறு செடி.  இதன். பற்களுள்ள சற்று நீண்ட தடிப்பான சொரசொரப்பான பச்சை இலைகளையும், மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய சிறுசெடி. ஈரமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது. இலையின் நீளம் 3-6 1.5-3 செ.மீ. தண்டு 5 -10 மி.மீ. நீளம், பூவின் விட்டம் 1.3 1.5 செ.மீ. பூவின் இதழ்கள் 5. நடுவில் வெண்மையாக இருக்கும். தன்மகரந்தச் சேர்க்கையால் விதை உண்டாகும். ஒரு செடியில் 1500 விதைகள் இருக்கும் அவை காற்றில் பரவி ஒட்டிக் கொள்ளும். இது சாலையோரங்களில், தரிசு நிலங்களில், தோட்டங்கள், புல்வெளிகள் எங்கும் பரவி வளரும். சீதோஷ்ண, மிதசீதோஷ்ண வெப்பத்தில் வளரக்கூடியது. உலகெங்கும் பரவியுள்ளது. லேசான பஞ்சுபோன்ற விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. மருத்துவப்பயன்கள் இது புண்ணாற்றும், குருதியடக்கி, கபநிவாரண,மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோர்ப்பு, வயிற்றுப்போக்கு, பேதி முதலியவை குணமாகும். 🌷 இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவிற்றில் பற்றிடச் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும். கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமே...